< Back
உலக செய்திகள்
ஈரான்: போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..!

கோப்புப்படம் 

உலக செய்திகள்

ஈரான்: போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..!

தினத்தந்தி
|
17 Nov 2022 6:31 AM IST

ஈரானில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இசே,

ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின. முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

காவல்துறையினர் மீது அவர்களை கற்களை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்