ஈரான்: வான்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலி - துருக்கி ராணுவம் அதிரடி
|ஈரானின் வடக்கே துருக்கி ராணுவ விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலியாகினர்.
பாக்தாத்,
இஸ்லாமிய நாடான துருக்கியில் குர்து இன மக்கள் தங்களுக்கு தனிநாடாக குர்திஸ்தானை அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்கு ஆதரவாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடங்கி குர்து இன மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் வசிக்கும் யாசிதி இன மக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
சின்ஜார் பாதுகாப்பு பிரிவு என்னும் பெயரில் அமைப்பு தொடங்கி யாசிதி இனமக்களின் நலனை காக்க அவர்கள் போராடுகிறார்கள். இந்த இரு அமைப்புகளும் இணைந்து துருக்கி மற்றும் ஈராக் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத செயல்கள் பலவற்றை அரங்கேற்றி வருகிறது. இதனால் இந்த இரு அமைப்புகளையும் துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்து அவற்றுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
வான்தாக்குதல்
அடிப்படையில் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்கள் சமய கோட்பாடுகளினால் வேறுபட்டு காணப்படுவதால் குர்து, யாசிதி இனமக்களுக்கும், பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவுகிறது.
ஈராக்கின் வடக்கு மாகணமான நினிவே பகுதியையொட்டிய பகுதிகளில் யாசிதி இனமக்கள் அதிக அளவில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியை தலைமையிடமாக கொண்டு சின்ஜார் பாதுகாப்பு பிரிவு செயல்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நினிவேக்குள் நுழைந்து துருக்கி போர் விமானங்கள் திடீர் வான்தாக்குதலில் ஈடுபட்டது.
துருக்கி ராணுவத்தினர் வெடிகுண்டுகளை பொழிந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தரைமட்டமாக்கினர். இதனால் புகைமண்டலம் பரவி அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது.
இந்த திடீர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.