< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிப்ஸ் வடிவிலான பை அறிமுகம்.. விலையோ ரூ.1.40 லட்சம்..!
|15 Oct 2022 10:10 PM IST
பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள 'லேஸ் சிப்ஸ்' வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகி உள்ளது.
ஸ்பெயின்,
பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள 'லேஸ் சிப்ஸ்' வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகி உள்ளது. பிராண்டட் கம்பெனியான 'பலென்சியாகா', இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம்.
இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிராண்டட் குப்பை பை ஒன்றை அறிமுகப்படுத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது இந்த நிறுவனம். தற்போது இந்த சிப்ஸ் பையை அறிமுகப்படுத்தி மீண்டும் பலரது கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளது.