< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தியா- தென்னாப்பிரிக்கா உறவு குறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சொன்ன தகவல்
|4 Jun 2023 4:35 PM IST
தென்னாப்பிரிக்காவின் நான்காவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குவதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கேப்டவுண்,
வெவ்வேறு கண்டங்களில் இருந்தாலும், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக செயல்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப்டவுண் பகுதிக்கு அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே 18 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுவதாகவும், தென்னாப்பிரிக்காவின் நான்காவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.