< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்வு
|19 Oct 2022 8:41 PM IST
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 8.2% உயர்ந்துள்ளதோடு, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து 8 சதவீதத்திற்கும் மேல் நீடித்து வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 0.4% உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கத்தால் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.