< Back
உலக செய்திகள்
இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து 9 மீனவர்கள் மாயம்; ஒருவர் பலி
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து 9 மீனவர்கள் மாயம்; ஒருவர் பலி

தினத்தந்தி
|
2 March 2023 10:32 PM IST

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயினர்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி ஆகும். இங்குள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் பலர் தங்களது படகுகளில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் வேகம் அதிகரித்தது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்புமாறு அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. இருப்பினும் இந்த அதிக அலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயினர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்