< Back
உலக செய்திகள்
இந்தோனேசியா: திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை
உலக செய்திகள்

இந்தோனேசியா: திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை

தினத்தந்தி
|
4 Dec 2022 4:21 AM IST

இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா வருகிற 15-ந்தேதி நிறைவேற்றப்படும் என அந்த நாட்டின் நிதி மந்திரி எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துகொள்வதையும், திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதை சட்டவிரோதமானது என்றும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உமர் கூறினார்.

மேலும் செய்திகள்