< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

தினத்தந்தி
|
31 Dec 2022 1:14 AM IST

இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவிலும் புதிய வகை தொற்றுகள் தென்பட தொடங்கியதால் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற சூழலில், இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

அங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி, கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் பாதிப்புகள் 10 லட்சத்தில் 1.7 பேருக்கு என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அதிபர் விடோடோ அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நேற்றுடன் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

அங்கு இதுவரை 67 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 583 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்