< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவு கொள்ள தடை
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவு கொள்ள தடை

தினத்தந்தி
|
7 Dec 2022 8:15 PM IST

திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றியது இந்தோனேசியா அரசு.

திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு. இந்தச் சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. மேலும் லிவிங் டுகெதர் வகை உறவுகளுக்கு 6 மாதம் காலம் சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்