< Back
உலக செய்திகள்
இந்தியாவின் வானிலை பெண் பிறந்தநாளுக்கு.. கூகுள் அளித்த பரிசு.!
உலக செய்திகள்

'இந்தியாவின் வானிலை பெண்' பிறந்தநாளுக்கு.. கூகுள் அளித்த பரிசு.!

தினத்தந்தி
|
23 Aug 2022 1:28 PM GMT

'இந்தியாவின் வானிலை பெண்' அன்னா மாணியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் அவரின் டூடுலை வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியா,

வானிலை தொடர்பான ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து புகழ்பெற்றவர் அன்னா மாணி. இந்திய இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளருமான இவரின் 104வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவரது ஆராய்ச்சிகள், இந்தியாவில் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை அறிவதில் முக்கிய பங்கினை ஆற்றி உள்ளது. இந்த நிலையில், அவரது பிறந்த நாளுக்கு கூகுள் ஒரு டூடுலை வெளியிட்டு அவரை சிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்