< Back
உலக செய்திகள்
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்
உலக செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்

தினத்தந்தி
|
13 Oct 2022 1:54 AM IST

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் பவுலோ மவுரோ, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவின் கடன் விகிதம், இந்த ஆண்டு இறுதிக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதமாக இருக்கும். இது, பல்வேறு வளரும் நாடுகளை விட அதிகம்.

இருப்பினும், இந்தியாவுக்கு எளிதில் தாங்கிக் கொள்ளக்கூடியதாகவே இருக்கும். இந்தியாவின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது. இதுவும் வளரும் நாடுகளை விட சற்று அதிகம். நிதி பற்றாக்குறையை குறைப்பது அவசியம்.

ரொக்க பரிமாற்றம், மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இந்தியா குறைத்தது, கார் வைத்திருப்பவர்களுக்குத்தான் பலன் அளித்துள்ளது. அதனால், வரி குறைப்பை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்