< Back
உலக செய்திகள்
அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் கவர்னர் திடீர் தைவான் பயணம்
உலக செய்திகள்

அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் கவர்னர் திடீர் தைவான் பயணம்

தினத்தந்தி
|
22 Aug 2022 11:13 PM IST

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் 4 நாள் பயணமாக தைவான் சென்றுள்ளார்.

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியும், அவரை தொடர்ந்து 5 அமெரிக்க எம்.பி.க்களும் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டதால் சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் நேற்று திடீர் பயணமாக தைவான் சென்றார். அவர் அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்