அமெரிக்கா: கார் விபத்தில் இந்திய மாணவி பலி
|அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் இந்திய மாணவி உயிரிழந்தார்.
வாஷிங்டன்,
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தனலி பகுதியை சேர்ந்தவர் ஜித்தி ஹரிகா (வயது 25). இவர் அமெரிக்காவின் ஓக்லகோமா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவக்கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், மாணவி ஹரிகா கடந்த சனிக்கிழமை காரில் ஓக்லகோமா மாகாணத்தில் உள்ள லோகன் நகரில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹரிகா சென்ற கார் உள்பட 4 கார்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மாணவி ஹரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த மாணவி ஹரிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.