< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

ஜப்பான் பிரதமருடன் இணைந்து மீன்களுக்கு உணவளித்த இந்திய பிரதமர் மோடி...!

தினத்தந்தி
|
24 May 2022 8:15 PM IST

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

டோக்கியோ,

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டிற்கு பின் ஜப்பான் பிரதமர் புமியோவுடன் இந்திய பிரதமர் மோடி இரவு உணவு விருந்தில் பங்கேற்றார். டோக்கியோவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்த இரவு உணவு விருந்து நடைபெற்று வருகிறது.

இரவு உணவு விருந்திற்கு முன் இருநாட்டு தலைவர்களும் விருந்தினர் மாளிகையில் அமைந்துள்ள குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தனர். இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோவும் இணைந்து குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்