ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டை நிறைவு செய்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
|ஜி-7 மாநாட்டை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார்.
பெர்லின்,
ஜெர்மனியில் 48-வது ஜி7 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார்.
அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டி அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.