< Back
உலக செய்திகள்
விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி: குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவு
உலக செய்திகள்

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி: குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
24 May 2024 11:54 PM GMT

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்த நிலையில் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஒட்டவா,

கனடா நாட்டின் சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜஸ்கிரத் தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது, ஜஸ்கிரத் குற்றவாளி என உறுதியானது. இதையடுத்து அவரது குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்