< Back
உலக செய்திகள்
சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சாவு
உலக செய்திகள்

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சாவு

தினத்தந்தி
|
8 April 2023 11:03 PM IST

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியான தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்குவதற்காக சென்றிருந்தார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு படிக்கட்டு வழியாக அவர் இறங்கி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த நபர் திடீரென அவரை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதில் கீழே விழுந்த சண்முகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணையில் சண்முகத்தை தள்ளி விட்ட நபர் முகமது அஸ்பரி அப்துல் கஹா (27) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகமது அஸ்பரியை கைது செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்