< Back
உலக செய்திகள்
வலியை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை

Image Courtesy : Twitter @IEEEFLEPS, @UofGlasgow

உலக செய்திகள்

வலியை உணரக்கூடிய "எலக்ட்ரானிக் தோலை" உருவாக்கி இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை

தினத்தந்தி
|
3 Jun 2022 11:46 AM IST

புதிய ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும்.

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா. இவர் அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியின் பேராசிரியராக உள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழு "வலியை" உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து ரவீந்தர் எஸ் தஹியா கூறுகையில், "இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க உதவும். மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான மின்-தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும்.

வலி போன்ற எதிர்பாராத தூண்டுதல்களுக்கு நாம் அனைவரும் நம் வாழ்வின் ஆரம்பத்திலேயே பழகிக்கொள்கிறோம். எலக்ட்ரானிக் தோலின் இந்த புதிய வடிவத்தின் வளர்ச்சி உண்மையில் நமக்குத் தெரிந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தாது. ஆனால் இது வெளிப்புற தூண்டுதலிலிருந்து கற்றல் செயல்முறையை விளக்குவதற்கான சுருக்கமான வழியாக இது கருதப்படுகிறது" என அவர் தெரிவித்தார்.



எலக்ட்ரானிக் தோல் குறித்த இந்த கண்டுபிடிப்பானது கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சென்சிங் டெக்னாலஜிஸ் குழுவின் சமீபத்திய சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்