< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை
|18 Nov 2022 3:12 AM IST
பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் படிப்பதற்காக சென்றவர், காம்பிரி குணால் (வயது 26). இந்தியர். இவர் அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 3 பேரின் வங்கிக்கணக்குகளில் மோசடி செய்து 26 ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.15.44 லட்சம்) எடுத்து மோசடி செய்துள்ளார்.
கடைசியில் அகப்பட்டுக்கொண்டார். அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் 9 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.