< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
உலக செய்திகள்

இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
1 May 2024 6:41 AM IST

வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் சாகில் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் சாகில் சர்மா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சாகில் தனது மனைவி மெஹக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் சாகில் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கிங்க்ஸ்டன் நகர கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் செய்திகள்