< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
|10 Feb 2024 9:42 PM IST
பெர்த் நகரத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், மத்திய மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்துக் கொண்டனர்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் 2 நாட்கள் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் பெர்த் நகரத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், மத்திய மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.