'இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|பிரதமர் மோடியின் அரசாங்கம் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
லண்டன்,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயணன் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெய்சங்கர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் மதிப்பு நாம் தினந்தோறும் செய்யும் செயல்களில் இருந்தே வெளிப்படுகிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்திய நாட்டின் மீதான நன்றியுணர்வை வெளிப்படுத்த ஒருபோதும் தவறியதில்லை.
பிரதமர் மோடியின் அரசாங்கம் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் மிக மோசமான சூழலுக்கு இடையே ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தினோம். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு நல்ல தலைமையும், லட்சியமும், நல்ல அரசாங்கமும் உள்ளது" என்று தெரிவித்தார்.