ஐநா பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக இந்திய அதிகாாி நியமனம்
|இந்திய தூதரக அதிகாரி அமந்தீப் சிங் கில், ஐநா சபையின் பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயாா்க்,
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டரசிஸ் இருந்து வருகிறாா். இவாின் தொழில்நுட்பத் தூதராக இந்தியாவைச் சோ்ந்த அமந்தீப் சிங் கில் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் மீதான தூதராக செயல்படுவாா் என தொிவிக்கப்பட்டுள்ளது.
அமந்தீப் சிங் கில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியலில் பிடெக் பட்டம் பெற்றுள்ளாா். அதன்பின், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அணுக்கரு கற்றலில் முனைவர் பட்டம் பெற்றாா்.
அமந்தீப் சிங் கில், கடந்த 1992-ம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சோ்ந்தாா். ஜெனீவா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்துள்ளாா். அவர் ஐ.நா.வில் செயல் இயக்குநராகவும், டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஐ.நா. பொதுச் செயலாளரின் உயர்மட்டக் குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் தற்போது ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் சர்வதேச டிஜிட்டல் உடல்நலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி கூட்டு (I-DAIR) திட்டத்தின் தலைமை செயல் அதிகாாியாக உள்ளாா்.