< Back
உலக செய்திகள்
கடன் தொகையில் வாக்குவாதம்... இந்திய மேனஜரை சுட்டுக்கொன்ற உகாண்டா போலீஸ்காரர் - அதிர்ச்சி வீடியோ
உலக செய்திகள்

கடன் தொகையில் வாக்குவாதம்... இந்திய மேனஜரை சுட்டுக்கொன்ற உகாண்டா போலீஸ்காரர் - அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
16 May 2023 4:26 PM IST

இந்தியரான அவர் கென்யாவில் உள்ள நிதி நிறுவனத்தில் மேனஜராக வேலை செய்து வந்தார்.

கம்பாலா,

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேனஜராக இந்தியரான உத்தம் பந்தாரி (வயது 39) வேலை செய்து வந்தார்.

இதனிடையே, இந்த நிநி நிறுவனத்தில் இவான் வெப்வயர் (வயது 30) என்ற நபர் 46 ஆயிரம் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) கடன் வாங்கியுள்ளார். இவான் வெப்வயர் போலீஸ்காரர் ஆவார்.

இந்நிலையில், கடந்த 12 ம் தேதி இவான் வெப்வயர் நிதிநிறுவனத்திற்கு வந்துள்ளார். அப்போது, கடன் தொகை தொடர்பாக நிதி நிறுவன மேனஜர் உத்தம் பந்தாரிக்கும், போலீஸ்காரர் வெப்வயருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியுள்ளது.

அப்போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வெப்வயர் மேனஜர் உத்தம் பந்தாரி மீது சரமாரியாக சுட்டார். நிதிநிறுவனத்திற்குள்ளேயே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அலறியடித்து ஓடினார். ஆனால், வெப்வயர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியரான நிதி நிறுவன மானேஜர் உத்தம் பந்தாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரர் வெப்வயரை கைது செய்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரர் வெப்வயர் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்