< Back
உலக செய்திகள்
அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உயர்மட்ட ஆலோசனை
உலக செய்திகள்

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உயர்மட்ட ஆலோசனை

தினத்தந்தி
|
15 Feb 2024 12:44 PM IST

இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.

புளோரிடா,

இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக கடந்த 11-ந்தேதி அமெரிக்கா சென்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா செல்லும் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆவார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக புளோரிடாவில் இன்று அமெரிக்க ராணுவ தளபதி ராண்டி ஜார்ஜ் மற்றும் பிற மூத்த ராணுவ அதிகாரிகளை மனோஜ் பாண்டே சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு, உலகளாவிய அமைதி மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இதனை இந்திய இராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்