< Back
உலக செய்திகள்
இயற்கை வேளாண் முறையை பாதுகாத்து ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் - பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
உலக செய்திகள்

இயற்கை வேளாண் முறையை பாதுகாத்து ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் - பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
11 Nov 2022 8:09 AM IST

வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில் பங்கேற்றனர்.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய மந்திரி தோமர் பேசியதாவது, வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த பிம்ஸ்டெக் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

சிறுதானியங்கள் ஊட்டச்சத்துமிக்கது என்றும் அதை பிரபலப்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்கு வேண்டும்.

சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்பட வேண்டும். இயற்கை மற்றும் சூழலியல் வேளாண் முறையில் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பதுடன், ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்