< Back
உலக செய்திகள்
தொற்றுநோய் சவால்களை சந்திக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.952 கோடி நிதி

கோப்புப்படம்

உலக செய்திகள்

தொற்றுநோய் சவால்களை சந்திக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.952 கோடி நிதி

தினத்தந்தி
|
17 Jun 2022 1:04 AM IST

தொற்றுநோய் சவால்களை சந்திக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.952 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவில் தவிர்க்கக்கூடிய தொற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றை முன்கூட்டியே கண்டறியவும், உடனடி பதிலளிப்பு செய்யவும், இது தொடர்பான சவால்களை சந்திக்கவும், 3 முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அமெரிக்கா 122 மில்லியன் டாலர் (சுமார் ரூ.952 கோடி) நிதி உதவியை அறிவித்துள்ளது.

இந்த நிதி உதவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி), தேசிய தொற்று நோய் நிறுவனம் (என்ஐஇ) ஆகியவை பெறுகின்றன.

இதற்கான அறிவிப்பை சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்த நிதியானது, நோய்க்கிருமிகள் மீது கவனம் செலுத்துவதின்மூலம் தொற்று நோய் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பான இந்தியாவை நோக்கிய முன்னேற்றத்தை வேகப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்