< Back
உலக செய்திகள்
சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2-ம் இடத்தில் இந்தியா
உலக செய்திகள்

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2-ம் இடத்தில் இந்தியா

தினத்தந்தி
|
25 July 2022 4:29 AM GMT

சுற்றுலா பயணிகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரில் திகழ்கின்றன.

சிங்கப்பூர்,

அழகிய நாடுகள் பல இருந்தாலும் சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அங்கு பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே, சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல் சங்கி விமான நிலையம் போன்ற மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரில் திகழ்கின்றன.

இதனால் சிங்கப்பூருக்கு பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 2,19,000 இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்