< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்க இந்தியா உறுதி - இந்திய தூதர் தகவல்
|9 Oct 2022 1:58 AM IST
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்று இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
கொழும்பு,
இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையின் மூத்த ராணுவ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என உறுதிபட தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இந்தியா தனது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் அடிப்படையில் திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு உதவ உறுதிபூண்டுள்ளது. சவாலான காலங்களிலும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கி இருக்கிறது' என்று தெரிவித்தார்.