< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடக்கம்
|16 Jun 2024 10:08 PM IST
இந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பினோம் பென்,
கம்போடியாவின் தலைநகர் பினோம் பென் மற்றும் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும் கம்போடியாவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடே ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
கம்போடியாவைச் சேர்ந்த 'கம்போடியா அங்கோர் ஏர்' என்ற விமான நிறுவனத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 4 விமான சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று உறவு மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், 'இது ஒரு வரலாற்று நிகழ்வு' என்று குறிப்பிட்டுள்ள்ளது.