< Back
உலக செய்திகள்
ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின் - அணு ஆயுதத்தை பயன்படுத்த தயாராகிறதா ரஷியா?
உலக செய்திகள்

ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின் - அணு ஆயுதத்தை பயன்படுத்த தயாராகிறதா ரஷியா?

தினத்தந்தி
|
6 Nov 2022 4:44 PM IST

இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடனான உரையாடலின் போது பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், "ஒரு போரில் வெற்றி பெற, பெரிய நகரங்களை தாக்க வேண்டிய அவசியமில்லை. 'இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்' அதற்கு ஒரு சிறந்த உதாரணம்". இவ்வாறு புதின் கூறினார் என்று 'தி டெய்லி மெயில்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையிலிருந்து பின்வாங்க போவதாக ரஷியா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஒரு முடிவைக் கொண்டுவர, தந்திரோபாய அணு ஆயுதத்தை ரஷியா பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்