அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை - முன்னாள் அதிபர் டிரம்ப் நேரில் ஆஜராக சம்மன்
|அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் ஆஜராகுமாறு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் ஆஜராகுமாறு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், தாம் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்ததோடு, வன்முறையை தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்து தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டிரம்ப்பிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் டிரம்ப் நேரில் ஆஜராக மறுக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, நீதித்துறையின் மூலம் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை வழங்கவும் முடியும் என்பதால், தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை டிரம்ப் சந்திக்க நேரிடுவார் என கூறப்படுகிறது.