< Back
உலக செய்திகள்
அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு

கோப்புப்படம்

உலக செய்திகள்

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு

தினத்தந்தி
|
2 Oct 2023 2:24 AM IST

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.

இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. இம்ரான்கான் ஏற்கனவே தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்