< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் இம்ரான்கானின் உதவியாளர் குரேஷி தேர்தலில் நிற்க தடை
|5 Feb 2024 4:31 AM IST
அரசு ரகசியங்களை கசிய விட்டது தொடர்பான வழக்கில் முகமது குரேஷிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய உதவியாளர் முகமது குரேஷி (வயது 67). இவர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 30-ந் தேதி இம்ரான்கான் மற்றும் முகமது குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகமது குரேஷி தேர்தலில் நிற்க தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.