< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிலி நாட்டில் சட்டவிரோத குடியேற்ற பகுதியில் தீ விபத்து - 8 சிறார்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
|8 Nov 2023 8:27 PM IST
சிலி நாட்டில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வசித்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 சிறார்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கொரோனல்,
சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 சிறார்கள் உள்பட 14 பேர் பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், மீட்புக்குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் சமையல் செய்யும் போது தீப்பற்றி, மர வீடுகளுக்கு பரவியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.