< Back
உலக செய்திகள்
ரஷியாவுக்கு நீங்கள் ஆயுதங்களை வழங்கினால்... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!
உலக செய்திகள்

ரஷியாவுக்கு நீங்கள் ஆயுதங்களை வழங்கினால்... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

தினத்தந்தி
|
3 March 2023 12:58 AM GMT

ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் எனஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார்.

இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கூறிய அவர், உக்ரைனில் ரஷியாவில் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவளித்ததுடன், ரஷியாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

"நான் சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யியை பார்த்தபோது... ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்ற தகவல் குறித்து அவரிடம் எங்களின் கவலையை தெரிவித்தேன்.

இது இருதரப்பு உறவில் கடுமையான பிரச்சனையாக இருக்கும் என்றும், விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்