< Back
உலக செய்திகள்
அதிக எண்ணிக்கையிலான ஈரானின் ஏவுகணைகளை அழித்து விட்டோம் - இஸ்ரேல் ராணுவம்
உலக செய்திகள்

அதிக எண்ணிக்கையிலான ஈரானின் ஏவுகணைகளை அழித்து விட்டோம் - இஸ்ரேல் ராணுவம்

தினத்தந்தி
|
2 Oct 2024 1:48 AM IST

ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் [இஸ்ரேல்],

இஸ்ரேல் மீது ஈரான் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவரான பென்னி காண்ட்ஸ், ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஈரான் மீண்டும் எல்லையைத் தாண்டி உள்ளது. இஸ்ரேல் அரசு பல ஆண்டுகளாக ஈரானைத் தாக்கும் திறன்களைக் கொண்டுள்ளது, மேலும் அரசாங்கம் வலிமையுடனும் உறுதியுடனும் செயல்பட முழு ஆதரவைக் கொண்டுள்ளது. எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. யாராக இருந்தாலும் தாக்குதல்கள் நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, இஸ்ரேலிய விமானப்படை ஒரு அறிக்கையில், பெய்ரூட்டில் 'ஹமாம் ஹொசைன்' பிரிவின் தளபதி பயங்கரவாதி டி அல்-பகார் ஹனாவியைக் கொன்றதாக தெரிவித்திருந்தது.

ஈரான் நேற்று இரவு மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை மத்திய கிழக்கை போர் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலின் ஒரு பெரிய தாக்குதலாக ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தின் மீது நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகள் மழை போல் பொழிந்த காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் புனிதத்தலமான ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தின் மீது ஈரானிய ஏவுகணைகள் மழை பொழிவதைப் பாருங்கள். இதுவே ஈரானிய ஆட்சியின் இலக்கு: இதுதான் அனைவருக்கும்" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்