< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷிய ராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு
|26 Jun 2024 4:20 AM IST
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போரில் ரஷியா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். ரஷியாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதனையடுத்து ரஷியா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் ராணுவ மந்திரி செர்ஜி சோய்கு (வயது 69) மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷிய அதிபர் புதின் மீதும் சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.