உக்ரைன் அணுமின் நிலையத்தை சுற்றிபாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
|உக்ரைன் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்துள்ளார்.
கீவ்,
உக்ரைனின் ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் நிலைமைகள் மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகவும், அணு உலை விபத்தைத் தடுக்க அதைச் சுற்றி ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பின் தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பின் தலைவர் ரபேல் கிராஸி கூறுகையில், "அணுமின் நிலையத்தில் மின் இணைப்புகளை மீண்டும் நிறுவுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அணுமின் நிலையத்தில் இயங்கி வரும் உலையை மூடுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். அணுமின் நிலையத்திற்கு வெளியே மின்சாரம் இல்லை. அதன் உள்கட்டமைப்பை சீரமைத்தால், மீண்டும் சேதமடைகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது."
அணுமின் நிலையம் உள்ள பகுதி முழுவதும் வெடிகுண்டு தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் அணு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும். அணு உலை விபத்து ஏற்படாமல் இருக்க இதுதான் ஒரே வழி." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.