என்னாடா கொடுமை...! சைத்தான் கூறியதாக மனைவியை கொன்று மூளையை தின்ற கணவர்...!
|மெக்சிகோவில்,கணவர், மனைவியைக் கொன்று, மூளையை தின்று, மண்டை ஓட்டை சாம்பலாக்கியுள்ளார்.
மெக்சிகோ சிட்டி
மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட் (39).இந்த ஜோடி கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர்.
மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஐந்து மகள்கள் உள்ளனர். இளைய மகளுக்கு 12 வயது, மூத்த மகளுக்கு 23 வயது.
அல்வாரோ சைத்தானை வழிபாடு செய்யும் குழுவை சேர்ந்தவர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
அல்வாரோ மனைவியை கடந்த் ஜூன் 29 ந்தேதி கொலை செய்து உள்ளார். கத்தி, உளி மற்றும் சுத்தியலால் கொலை செய்து உள்ளார். பின்னர் உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீட்டின் பின்புறமுள்ள பள்ளத்தாக்கில் வீசி உள்ளார். சில பாகங்களை வீட்டில் வைத்து உள்ளார்.
விசாரணையின் போது, சைத்தானின் தொடர்ச்சியான வேண்டுகோளின் காரணமாக அவர் இந்த கொடூரமான கொலையை செய்ததாக கூறி உள்ளார்.மேலும் மனைவியின் மூளையை தின்று மண்டை ஓட்டை எரித்து சாம்பலாக்கியதாகவும் கூறி உள்ளார்.