< Back
உலக செய்திகள்
மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி ; 10 பேர் பலி - 20 பேர் மாயம்
உலக செய்திகள்

மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி ; 10 பேர் பலி - 20 பேர் மாயம்

தினத்தந்தி
|
1 Jun 2022 9:44 AM IST

மெக்சிகோவை தாக்கிய சூறாவளியில் 10 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டை நேற்று சூறாவளி புயல் இன்று தாக்கியது. அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது.

கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் மாயமாகினர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்