< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து
|16 March 2023 9:52 PM IST
இங்கிலாந்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்