< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷிய அதிபர் தேர்தலில் புதின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி - முதற்கட்ட தகவல் வெளியீடு
|18 March 2024 2:49 AM IST
வருகிற மே மாதம் 7-ந்தேதி புதிய அதிபருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட் கிழமை) வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
வருகிற மே மாதம் 7-ந்தேதி புதிய அதிபருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிபரின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புதின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. புதின் சாகும் வரை ரஷியாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக அப்போதே, பலரும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.