< Back
உலக செய்திகள்
ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி

தினத்தந்தி
|
1 Jun 2023 3:51 AM IST

ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் கருகி பலியாகினர்.

வியன்னா,

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியின் 3-வது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரவிய தீயை போராடி கட்டுப்படுத்தினர். துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே செத்தனர். ஒரு பெண் படுகாயம் அடைந்ததில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்