கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்: விமானி பலி
|கொலம்பியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார்.
பகோட்டா,
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் இரு விமானங்களும் சுக்குநூறாக நொறுங்கி கீழே விழுந்தன. இதில் ஏற்பட்ட பலி விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகமல் இருந்தது. இதற்கிடையே இரு விமானங்களும் மோதி கீழே விழுந்த வீடியோ அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பயிற்சியின் போது இரண்டு கொலம்பிய விமானப்படை விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாதில் விமானி ஒருவர் பலியானார். இரண்டாவது விமானத்தில் பயணித்த விமானி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது விமானத்தை இயக்கிய விமானி பலத்த காயங்களுடன் அருகிலுள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.