< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஹாங்காங்: கடலுக்குள் மூழ்கிய மிதவை உணவகம்
|22 Jun 2022 5:59 AM IST
கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக விளங்கிய ஜம்போ மிதவை உணவகம் கடலுக்குள் மூழ்கியது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்த உணவகம் கடந்த 2020-ஆம் ஆண்டு மூடப்பட்டது. செயல்படாத நிலையிலும் அந்த உணவகத்தை பராமரிப்பதற்கு அதிக செலவானதால் முதலீட்டாளா்களுக்கு தொடா்ந்து இழப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, ஹாங்காங் கடல் பகுதியிலிருந்து பராமரிப்பு செலவு குறைவான மற்றொரு பகுதியை நோக்கி அந்த மிதவை உணவகம் கடந்த செவ்வாய்க்கிழமை இழுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக தென் சீனக் கடலில் பாா்சல் தீவுகள் அருகே அது மூழ்கியது. இதில் யாரும் காயமடையவில்லை என்று உணவக நிறுவனம் தெரிவித்துள்ளது.