< Back
உலக செய்திகள்
சீனாவில் தூதரகத்தை திறந்த ஹோண்டுராஸ்..!!
உலக செய்திகள்

சீனாவில் தூதரகத்தை திறந்த ஹோண்டுராஸ்..!!

தினத்தந்தி
|
12 Jun 2023 12:30 AM IST

தைவானுடனான உறவை முறித்துக் கொண்ட ஹோண்டுராஸ் சீனாவில் தனது தூதரகத்தைத் திறந்தது.

பீஜிங்,

சீனாவில் இருந்து சுதந்திர நாடாக பிரிந்த தைவானை இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் பிற நாடுகளை எச்சரித்துள்ளது. எனவே பல ஆண்டுகள் தைவானின் நட்பு நாடாக இருந்த ஹோண்டுராஸ் கடந்த மார்ச் மாதம் சீனாவுடன் தனது தூதரக உறவை தொடங்கியது.

இதனையடுத்து தைவானுடனான தனது உறவை சமீபத்தில் முறித்துக்கொண்டது. இதற்கு பதிலடியாக தைவானும் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள தனது தூதரகத்தை மூடியது.

இந்த நிலையில் ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனையடுத்து தலைநகர் பீஜிங்கில் ஹோண்டுராஸ் தனது தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.

மேலும் செய்திகள்