சீனாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள ஹோண்டுராஸ் திட்டம்
|சீனாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள ஹோண்டுராஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெகுசிகல்பா,
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசுக்கு கடந்த மார்ச் மாத இறுதியில் சீன வெளியுறவு மந்திரி கின் காங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி என்ரிக் ரெய்னாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு நாடுகளிடையே தூதரகத்தை நிறுவுவது குறித்த கூட்டறிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர்.
தூதரகத்தை நிறுவி 2 மாதங்கள் ஆன நிலையில் தற்போது சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஹோண்டுராஸ் வெளியுறவு மந்திரி என்ரிக் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தங்கள் நாட்டின் தயாரிப்புகளை அணுகுவதற்கான நல்ல வாய்ப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே தைவானுடனான தூதரக உறவுகளை துண்டித்து விட்டதாக ஹோண்டுராஸ் தெரிவித்தது. எனவே ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக தைவான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.