< Back
உலக செய்திகள்
ஹோண்டுராஸ் பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்
உலக செய்திகள்

ஹோண்டுராஸ் பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்

தினத்தந்தி
|
6 Dec 2023 3:15 AM IST

10 பேர் சம்பவ இடத்திலும், மேலும் இருவர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெகுசிகல்பா,

அமெரிக்காவின் ஹோண்டுராசில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 60 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் 10 பேர் சம்பவ இடத்திலும், மேலும் இருவர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்தனர் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை லெப்டினன்ட் கிறிஸ்டியன் செவில்லா கூறினார்.

பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்