< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம் - ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரெஞ்சு நடிகைகள்
|6 Oct 2022 8:53 PM IST
ஈரானில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது.
பாரிஸ்,
ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.